அரியலூர்

தஞ்சை, நாகை, கடலூர் மாவட்ட  பாசனத்துக்காக கீழணையிலிருந்து தண்ணீர் திறப்பு

DIN

அரியலூர் மாவட்டம், அணைக்கரை கீழணையிலிருந்து கடலூர், தஞ்சை, நாகை மாவட்ட பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைக்கரை கீழணையிலிருந்து தெற்கு ராஜன் வாய்க்காலில் 520 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடியும், வடவாறு வாய்க்காலில் 1800 கன அடியும் பாசனத்துக்கு தண்ணீரை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் புதன்கிழமை திறந்து வைத்து கூறியது:
தஞ்சை,கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் முதலிடம் பிடிக்க வேண்டும். தண்ணீர் சரியான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள், முழுமையாக பயன்படுத்திக்கொண்டு விவசாயத்தை செழிப்பாக செய்திட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில்  அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT