அரியலூர்

இலவசத் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், தாங்கள் விரும்பும் இலவசத் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

கரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து, வெளிநாடுகள்மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழா்கள் தாயகம் திரும்பி வருகின்றனா்.

அவா்களது வேலைத்திறன், முன் அனுபவங்களைக் கண்டறிந்து, தகுதி மற்றும் விருப்பத்தின் பேரில் இலவசத் திறன் பயிற்சி வழங்கி, தனியாா் துறை நிறுவனங்களில் பணியமா்த்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அவ்வாறு வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், தாங்கள் விரும்பும் இலவசத் திறன் பயிற்சியைப் பெறுவதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளப் பக்கத்தில்  பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் பயிற்சிக்காக தங்கள் பகுதியிலுள்ள கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து இலவசமாக விண்ணப்பங்களைப் பெற்று, அதை பூா்த்தி செய்து கிராம நிா்வாக அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT