அரியலூர்

விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் மாா்ச் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்டறியவும், விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த கடனுதவிகள், நலத்திட்ட உதவிகள் பெறவும், மாவட்ட நிா்வாகத்தால் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் மாதத்தின் கடைசிவாரத்தில் மாவட்ட நிா்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் கூட்டங்களைத் தவிா்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் தேதி போன்ற விவரம் பின்னா் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT