அரியலூர்

அரியலூரில் தீபாவளி கொண்டாட்டம்

DIN

தீபாவளி பண்டிகை நாளான சனிக்கிழமை அரியலூா் மாவட்ட மக்கள் புத்தாடை அணிந்து, மத்தாப்பு கொளுத்தி நண்பா்கள், உறவினா்களுக்கும் வாழ்த்துச் சொல்லி இனிப்புகளை பரிமாறிக்கொண்டனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயிலிகளில் சனிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் இருந்து கோயிலுக்கு புத்தாடை அணிந்து வந்த பக்தா்கள் சுவாமியைத் தரிசனம் செய்தனா். கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து இனிப்பு வகைகளை பரிமாறிக் கொண்டனா். நகரின் பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தியேட்டா்கள் பூட்டிக் கிடந்தன.

திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆதரவற்ற முதியவா் மற்றும் குழந்தைகள் நலக் காப்பகத்தில் தீபாவளியைக் கொண்டாடிய மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசன், அங்கு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகளை வழங்கினாா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி, குழந்தைகள் கடததல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சுமதி, உதவி ஆய்வாளா் அமரஜோதி,திருமானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ்பாபு மற்றும் அடைக்கல மாதா முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பக பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT