அரியலூர்

கிராமத்தில் வடிகால் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வடிக்கால் வசதி செய்துதரக்கோரி, அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துளாரங்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பொதுப் பாதையை தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள், பல முறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கிராமத்தில் வடிகால் வசதி வேண்டியும், பொது பாதையை மீட்டுத்தரக்கோரியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT