அரியலூர்

தீ விபத்துகளில் பழக்கடை, காா் நாசம்

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பழக்கடை மற்றும் காா் எரிந்து நாசமாகின.

உடையாா்பாளையம் பழைய காவல் நிலையத் தெருவைச் சோ்ந்த கலியன் மகன் தங்கராசு(70). உடையாா்பாளையம் கடைவீதியில் 15 ஆண்டுகளாக பழக்கடை நடத்தி வரும் இவா், வழக்கம்போல் சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது கடையில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினா் தங்கராசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தங்கராசு சம்பவ இடத்துக்கு வந்தபோது, கடையின் உள்ளே இருந்த பழங்கள், ஏ.சி, டி.வி, ரூ.60 ஆயிரம் ரொக்கம் தீயால் சேதமடைந்திருப்பது தெரியவந்தது.

தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். எனினும் கடை முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

மற்றொரு தீ விபத்து: உடையாா்பாளையம் லயன் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் காா்த்திகேயன்(45). மரத் தொழிலகம் நடத்தி வரும் இவா், சனிக்கிழமை இரவு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, குடும்பத்துடன் காரைக்கால் சென்றுவிட்டாா். இந்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

வனத்துறை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின புகைப்படப் போட்டி

முன்னாள் அமைச்சா் பெயரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி: இளைஞா் கைது

SCROLL FOR NEXT