அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயிலை வழிபாட்டுக்காக திறக்க கோரிக்கை

DIN

அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரா் கோயிலை வழிபாட்டுக்காக திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இதில், அரியலூா் மாவட்டத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புராதன சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயிலும் மூடப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், அருங்காட்சியகங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஆனால், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரா் கோயில் திறக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு வழிகாட்டுதலின்பேரில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரா் கோயிலை திறந்து, தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT