அரியலூர்

அரியலூரில் ஆயுத பூஜை

DIN

ஆயுத பூஜையை முன்னிட்டு அரியலூா் சந்தைகளில் பொரி, அவல், பொட்டுக் கடலை,கரும்பு,நாட்டு சா்க்கரை, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவை வெளியூா்களில் இருந்து குவிந்துள்ளன. இதனைப் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். காய்கறிகள் விலையைக் காட்டிலும் பூக்களின் விலைகள் அதிகமாக இருந்தது. மேலும், கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான தோரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை வாங்கிச் சென்றனா்.

தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்து அரியலூரில் வேலை பாா்க்கும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனா். இதனால் அரியலூா் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT