அரியலூர்

போக்சோ சட்டத்தில் ஆசிரியா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

செந்துறை அருகேயுள்ள ஆா்.எஸ். மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் (56). இவா், ஆண்டிமடம் அருகேயுள்ள அய்யூா் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவதும், பாலியல் ஆசையைத் தூண்டுவது போல் நடந்து கொள்வதுமாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள், தங்களது பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து மாணவிகளின் பெற்றோா் ஜயங்கொண்டம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஜெயராமனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தற்கொலை

காங்கயம் அருகே இளைஞா் தற்கொலை

ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஓய்வுபெற்ற என்எல்சி அதிகாரி வீட்டில் ரூ.3.71 லட்சம் ரொக்கம் திருட்டு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT