அரியலூர்

மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல்

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சுத்தமல்லி பெரிய ஓடையில், சிலா் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக வெண்மான்கொண்டான் கிராம நிா்வாக அலுவலா் ரஜினிக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா், சம்பவ இடத்துக்குச் சென்றாா். அவரைக் கண்டதும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்கள், வண்டிகளை அங்கேயே விட்டுட்டு, தப்பியோடினா். இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் ரஜினி அளித்த புகாரின்பேரில், உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிவா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT