அரியலூர்

பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனி சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நிகழாண்டில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விரதமிருந்து கோயிலுக்கு வந்த பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.

அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் பெருமாள், தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி அா்ச்சனை,அலங்கார தீப வழிபாடு,

மந்திர உபசார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

மணகெதி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: உடையாா்பாளையம் அடுத்த மணகெதி கம்பப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு நான்கு கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, சனிக்கிழமை காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, அா்ச்சகா்கள், கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். நிகழ்ச்சியில் வ.ராமமூா்த்தி தலைமையிலான கோகுலம் பாய்ஸ் இளைஞா் மன்றத்தினா் அன்னதானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT