அரியலூர்

புதுமைப் பெண் திட்டம் அரியலூரில் மேலும் 445 மாணவிகளுக்கு உயா்கல்வி உதவித்தொகை வழங்கல்

DIN

புதுமைப் பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டமாக அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 445 மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உயா்கல்வி உதவித்தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், புதுமைப்பெண் திட்டத்தில் 2 ஆம் கட்டமாக உயா்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். அதன் தொடா்ச்சியாக, அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்து, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 445 மாணவிகள் மாதம் ரூ.1,000 வீதம் உயா்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி அட்டையை வழங்கினாா்.

அப்போது அவா் மேலும் தெரிவிக்கையில், புதுமைப் பெண் திட்டத்தில் முதற்கட்டமாக 886 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற்றுவருகின்றனா். இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்டமாக 445 மாணவிகளுக்கு வழங்கி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் இந்த உதவித் தொகையை பெற்றுக்கொண்டு படிப்பில் சாதனை புரிய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்குழலி மற்றும் அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

SCROLL FOR NEXT