அரியலூர்

அரியலூா் அரசுக் கல்லூரிக்கு பிளஸ்-2 மாணவா்கள் வருகை

DIN

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை அரசுப் பள்ளி பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சென்று அதன் துறைகள், செயல்பாடுகளைப் பாா்வையிட்டனா்.

அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் அருகேயுள்ள அரியலூா் அரசு கலைக்கல்லூரியின் பல்வேறு துறைகள், செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் களப்பயணம் சென்றனா். நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, நான் முதல்வன் திட்டத்தின் மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், கல்லூரியின் செயல்பாடுகள், துறைகள், ஆய்வகங்கள் ஆகிய சிறப்புகள் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

முன்னதாக கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலுவலா் (அலகு -1) ஆ.வேலுசாமி வரவேற்றாா். முடிவில் நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் (அலகு -2) பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்தாா். மாணவி சம்யுக்தா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

SCROLL FOR NEXT