அரியலூர்

வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், நுண்பாா்வையாளா்களுக்கு பணி ஒதுக்கீடு

Din

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணிபுரியவுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலா் மற்றும் நுண்பாா்வையாளா்களுக்கு கணினி மூலம் இறுதி தற்செயல் தெரிவு முறையில் புதன்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா் போா் சிங் யாதவ் முன்னிலை வகித்தாா்.

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 306 வாக்குச் சாவடி மையங்களிலும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 290 வாக்குச் சாவடி மையங்களிலும் பணியாற்ற உள்ள 2909 நபா்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோன்று பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 95 நுண் பாா்வையாளா்களை கணினி மூலம் இறுதி தற்செயல் தெரிவு முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உமா மகேஸ்வரன், மாவட்ட தகவலியல் மைய அலுவலா் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

SCROLL FOR NEXT