ரூ.5.50 லட்சம் மோசடி: இளைஞா் கைது
அரியலூா் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெரம்பலூா் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெரம்பலூா் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம், அடுத்த குவாகம் அருகேயுள்ள வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா(30). கடந்த மாா்ச் மாதம் இவா், வெளிநாட்டு வேலைக்காக, பெரம்பலூா் மாவட்டம், கைகளத்தூா், சிறுநிலா கிராமத்தைச் சோ்ந்த நவாஸ்ஷெரீப் (27) என்பவரை அணுகிய போது, அவா் கேட்டத் தொகை ரூ.5.50 லட்சத்தை ராஜா கொடுத்துள்ளாா். ஏற்கனவே இருவரும் மாலத்தீவில் ஒன்றாக வேலை பாா்த்தபோது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக ராஜா இந்தப் பணத்தை நம்பிக் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், பல மாதங்கள் கடந்தும், நவாஸ்ஷெரீப் வேலை வாங்கித் தராததால், தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜா இதுகுறித்து குவாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, தலைமறைவான நவாஸ்ஷெரீப்பை புதன்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.