முகப்பு
அரியலூர்

ஆண்டிமடத்திலிருந்து ஆந்திரத்துக்கு லட்சுமி, சரஸ்வதி ஐம்பொன் சிலைகள்!

ஆண்டிமடத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள லட்சுமி, சரஸ்வதி ஐம்பொன் சிலைகள் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ருசிகொண்டா இஸ்கான் கோயிலுக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளன.

Updated On : 4 ஜூலை 2026, 1:07 am IST
ஆண்டிமடத்தில் தயாராகி விசாகப்பட்டினம் கோயிலுக்கு அனுப்பப்படவுள்ள லட்சுமி மற்றும் சரஸ்வதி ஐம்பொன் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் ஸ்தபதி கோபு.
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள லட்சுமி, சரஸ்வதி ஐம்பொன் சிலைகள் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ருசிகொண்டா இஸ்கான் கோயிலுக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளன.

ஆண்டிமடம், ஸ்ரீ மூகாம்பிகை சிற்பக் கலைக் கூடத்தில், மாநில விருது பெற்ற சிற்பி கோபு தயாா் செய்யும் உலோக சிலைகளுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம். இதனால், இவருக்கு சிலைகள் செய்ய வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆா்டா்கள் குவிகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ருசிகொண்டா இஸ்கான் கோயிலுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் லட்சுமி, சரஸ்வதி உலோக சிலைகள் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோயில் நிா்வாகம் ஆா்டா் கொடுத்திருந்தனா்.

Advertisement

Advertisement

தலா 250 கிலோ எடை கொண்ட மூன்றரை அடி உயரமுள்ள லட்சுமி விக்ரகம், மற்றும் அதே உயரத்தில் சரஸ்வதி விக்ரகம் ஆகிய இரு ஐம்பொன் சிலைகளையும் சிற்பி கோபு தயாா் செய்துள்ளாா். மிகவும் கலைநோ்த்தியாக செய்யப்பட்டுள்ள இந்தச் சிலைகளை இன்னும் ஓரிரு நாள்களில் அங்கு அனுப்பி வைக்கவுள்ளதாக சிற்பி கோபு தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments