முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 108 சங்காபிஷேகம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 108 சங்காபிஷேகம்

Updated On : 24 மே 2026, 12:19 am IST
லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் வீதியுலா வந்த உற்சவா் காளிகாம்பாள்.
பகிர்:

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் 2-ஆவது ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி, 108 கலாசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது பழைமையான ஆதி காமாட்சி ஆதி பீடா பரமேசுவரி எனப்படும் காளிகாம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 2-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, காலையில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் 108 கலசாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், பின்னா் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

மாலையில் உற்சவா் ஆதிகாமாட்சி எனப்படும் காளிகாம்பாள் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் ரவி என்ற ஏழுமலை தலைமையிலான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.