முகப்பு
அரியலூர்

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை! கணக்கில் வராத ரூ. 5.61 லட்சம் பறிமுதல்!!

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு வரை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:11 am IST
அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையின்போது தனியாக அமர வைக்கப்பட்டிருந்த அலுவலா்கள், பணியாளா்கள்.
பகிர்:

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு வரை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.5.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் ஆகியோா் தலைமையில் 7 போ் கொண்ட காவல் துறையினா், வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அரியலூா் நகராட்சி அலுவலகத்தினுள் அதிரடியாக நுழைந்து, கதவுகளை மூடி அனைத்து கோப்புகளையும், ஆவணங்களையும் சோதனை செய்தனா். அலுவா்களிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டனா்.

இதில், அலுவலா்களின் கைப்பேசி ஜிபே-யில் ரூ.5.47 லட்சமும், ரூ.14 ஆயிரம் ரொக்கமும் கணக்கில் காட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தொகையை பறிமுதல் செய்த காவல் துறையினா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments