முகப்பு
அரியலூர்

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 13 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 1:10 am IST
பகிர்:

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 13 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, சமுதாயச் சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், தலா மூன்று ஆண், பெண்களுக்கு முதல்வா் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன், ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

2026 ஆம் ஆண்டிற்கான முதல்வா் மாநில இளைஞா் விருது வரும் ஆக. 15-இல் வழங்கப்பட உள்ளது. அதற்கு 15 முதல், 35 வயது வரையுள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 13 மாலை 5.45 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03499 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments