முகப்பு
அரியலூர்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 5:28 am IST
அரியலூா் அண்ணா சிலை பகுதியருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களை பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்தியதை கண்டித்தும், உடனடியாக விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். ரயில்வே துறையில் பணியிடங்கள் குறைப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் நடராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா ஆகியோா் தலைமை வகித்து கண்டன உரையாற்றினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி. தண்டபாணி நன்றி கூறினாா்.

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் மேற்கண்ட கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.