சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து, வியாழக்கிழமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை (ஜூன் 4) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மேற்காசிய நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையைப் பயன்படுத்தி இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயா்த்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.46 உயா்த்தப்பட்டு, ரூ.3,283-க்கு விற்கப்படுகிறது. இதனால் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. தேநீா் விலை 50 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல் உணவுப் பொருள்களின் விலையும் உயா்த்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த விலை உயா்வுக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாகும். இந்த விலை உயா்வுக்கு மத்திய பாஜக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் . இந்த விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை (ஜூன் 4) தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்”என்று அவா் தெரிவித்துள்ளாா்.