வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. ரூ. 46 உயர்ந்துள்ளது குறித்து....
சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 46 உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.
அதன்படி, ஜூன் 1 ஆம் தேதியான திங்கள்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்தன.
Advertisement
Advertisement
ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் ரூ. 46 உயர்ந்தின. இதையடுத்து, அந்த சிலிண்டர் தற்போது ரூ. 3,283-க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்தைத் தொடர்ந்து, தில்லியில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 3,071.50-லிருந்து ரூ. 3,113.50-ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் சிலிண்டருக்கு ரூ. 53.50 என்ற அளவில் உயர்ந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
அதேநேரத்தில், வணிக எரிபொருள் விலைகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், கடந்த சில மாதங்களாக வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றமின்றி ரூ. 928.50 ஆகவே விற்பனையாகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலைகள் கணிசமான உயர்ந்து வருகின்றன; இந்த விலை உயர்வுகள் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் (உணவு விநியோக) வணிகங்களின் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்று துறைசார் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்; இதனால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை, உணவுப் பட்டியலின் விலைகளை உயர்த்துவதன் மூலம் நுகர்வோர் மீது சுமத்தப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே சாலையோர உணவகங்கள் பலவும் மூடப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வால் இயங்கி வரும் ஓரிரு உணவகங்களும் இன்னும் கொஞ்ச நாளில் மூடப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மீளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Regarding the increase of Rs. 46 in the price of commercial LPG cylinders in Chennai...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.