3 நாள்களில் 1.40 கோடி சிலிண்டர் முன்பதிவுகள்: மத்திய அமைச்சகம்
3 நாள்களில் 1.40 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவாகியுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்தது பற்றி...
கடந்த மூன்று நாள்களில் 1.40 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவாகியுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா வியாழக்கிழமை (ஜூன் 11) தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப் 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால், உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் சந்தையில் கச்சா என்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் எரிபொருள்கள், உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளதோடு தட்டுப்பாடும் நிலவுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சுஜாதா ஷர்மா தெரிவித்ததாவது:
நாட்டில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் சீராக உள்ளது. நமது சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனில் இயங்கி வருகின்றன. சில சில்லறை விற்பனை நிலையங்களில் வழக்கத்தை விட அதிகமான விற்பனை காணப்படுகிறது.
நாங்களும் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்யப் பணியாற்றி வருகிறோம். கடந்த மூன்று நாள்களில், 1.40 கோடி (14 மில்லியன்) சமையல் எல்பிஜி சிலிண்டர்களுக்கான முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், 1.49 கோடி (14.9 மில்லியன்) சிலிண்டர்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், ஏறத்தாழ 22,340 டன் எல்பிஜி விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
Sujata Sharma, Joint Secretary in the Ministry of Petroleum and Natural Gas, stated on Thursday (June 11) that 1.40 crore LPG cylinders have been booked over the past three days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.