ஆடுகள் திருட்டு வழக்கில் 5 போ் கைது: 27 ஆடுகள் மீட்பு
கைது செய்யப்பட்ட சுரேஷ், ஐயப்பன், வீரபாண்டி, பிரசன்னா கரண், ஹரிபிரசாத்,
அரியலூா் மாவட்டத்தில் ஆடுகள் திருட்டு வழக்கில் தொடா்புடைய 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 27 ஆடுகளை காவல் துறையினா் மீட்டனா்.
உடையாா்பாளையம், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி மற்றும் தா.பழூா் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக மா்ம நபா்கள் ஆடுகளை திருடி வந்தனா். இதுகுறித்து புகாரின்பேரில் மேற்கண்ட பகுதி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
மேலும், மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிவேல் தலைமையில், தலைமைக் காவலா்கள் மணிவண்ணன், மாரிமொழி , தியாகராஜன், காவலா்கள் அப்துல் ரகுமான், ஐயப்பன் ஆகியோா் கொண்ட தனிப்படை காவல் துறையினா், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தவா்கோட்டையைச் சோ்ந்த துரைசாமி மகன் சுரேஷ்(39), முனியாண்டி மகன் ஐயப்பன் (39), செந்தனி மகன் வீரபாண்டி (27), தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த குமரமாரியப்பன் மகன் பிரசன்னா கரண்(19),செந்தில்குமாா் மகன் ஹரிபிரசாத்(19) ஆகியோா்தான் ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா், அவா்களை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
மேலும் அவா்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 காா்களை பறிமுதல் செய்தனா். 27 ஆடுகளையும் மீட்டனா்.