முகப்பு
கரூர்

புகளூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

: பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற கரூர் மாவட்டம் புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பாராட்டப்பட்டனர்.

Updated On : 13 மே 2013, 1:40 am IST
பகிர்:

: பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற கரூர் மாவட்டம் புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பாராட்டப்பட்டனர்.

புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 194 பேர் எழுதினர்.  இதில் 174 பேர் வெற்றி பெற்று 90 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தப் பள்ளியின் மாணவி சொர்ணலட்சுமி 1,065 மதிப்பெண் முதலிடத்தையும், மாணவி சுஜாதா, 1,041 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், வினோதினி, தேவிகா ஆகியோர் தலா  1,033 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றனர்.

இந்த மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், புஞ்சைபுகளூர்  பேரூராட்சித் தலைவர் லலிதா, பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் பாராட்டினார்.

Advertisement

Advertisement

இப்பள்ளியில் 6,7-ம் வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி செயல்படும் என்று பள்ளி தலைமையாசிரியர்  கூறினார்.

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 136 பேர் தேர்வெழுதினார். இதில் 116 பேர்  வெற்றி பெற்று, 85 சத தேர்ச்சி பெற்றனர். இதில் கதிரேசன் 1,012 மதிப்பெண் முதலிடத்தையும், வினோத் 976 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், தினேஷ் 964 மதிப்பெண்கள் 3-ம் இடத்தையும்  பெற்றனர்.

இந்த மாணவர்களை தலைமையாசிரியர் வெங்கடாசலம், உதவித் தலைமை ஆசிரியர் தங்கவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் பாராட்டினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.