கரூர்

ஜன.10-இல் இறுதி வாக்காளர் பட்டியல்

DIN

வரும் ஜனவரி 10-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
 இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கரூர் மாவட்டத்தில்  நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உரிய படிவங்களில்  விண்ணப்பிக்க வரும் 15-ஆம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு சரிபார்ப்புப் பணிகள் வரும் 15-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. 
வரும் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த  இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 10-ஆம்தேதி அன்று வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT