கரூர்

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை சரி செய்ய வலியுறுத்தல்

DIN

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி யில் அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பள்ளப்பட்டியில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் போது அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அடியோடு இடிந்து விழுந்துள்ளது. இதனால், பள்ளப்பட்டி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து நங்காஞ்சி ஆற்றை நோக்கிச் செல்லும் கழிவுநீர் மருத்துவமனை வளாகத்துக்குள் செல்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் கழிவுநீர் தேங்கிக் காணப்படுவதால் சுகாதார சீர்கேடுகளும் நிகழ்கின்றன. இரவு நேரங்களில் பன்றிகள் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிகின்றன. நோய்கள்பரவும் முன்னரே சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளப்பட்டி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT