கரூர்

தேசிய சாப்ட் டென்னிஸ்: சிறப்பிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு

DIN

தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார். அவருக்குப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் அண்மையில் தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் எஸ். சரவணன் தமிழக அணி சார்பில் பங்கேற்று, தனி நபர் பிரிவு மற்றும் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பதக்கம் பெற்ற மாணவருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கு சேரன் பள்ளிகளின் தலைவர் பி.எம்.கருப்பண்ணன் தலைமை வகித்து மாணவர் சரவணனைப் பாராட்டினார்.  தாளாளர் பி.எம். கே.பாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் வரவேற்றார். பள்ளி ஆலோசகர் பி.செல்வதுரை வாழ்த்திப்பேசினார். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர்  நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT