கரூர்

தூய்மை சேவை உறுதியேற்பு நிகழ்ச்சி

DIN

கரூர்மாவட்டத்தில் தூய்மை சேவை-உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த தூய்மை சேவை அக்.2 வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் பங்கேற்று மேலும் பேசுகையில், தூய்மை இந்தியாவை உருவாக்க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்து மக்கள் எளிதில் அறிந்துகொள்ளும்வகையில் இருவாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உறுதியேற்றுக்கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜ்மோகன், வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரன், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT