கரூர்

தாந்தோன்றிமலையில் புரட்டாசி திருவிழா: இன்று கொடியேற்றம்

DIN

கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென்னக திருப்பதி என்றும், திருமலைக்குச் செல்ல முடியாத சோமகர்மா என்ற பக்தருக்கு மனமிறங்கி திருப்பதி வெங்கடாசலபதியாக  தானாகத் தோன்றி காட்சியளித்தமையால், தாந்தோன்றிமலை பெருமாள் எனவும் போற்றப்படும் கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, வரும் 26-ம் தேதி சுவாமி வெள்ளி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
திருக்கல்யாண உற்சவம் 29-ம் தேதியும், தேரோட்டம் அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, 13-ம் தேதி புஷ்பயாக நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர் ம. சூரியநாராயணன், செயல் அலுவலர் நா. சுரேஷ் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT