கரூர்

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

DIN

கரூரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
 கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். இதில் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் ப.கார்த்திகேயன் பங்கேற்று, பிளஸ்-2 கணக்குப்பதிவியல் பாடத்துக்கான விடியோ பதிவை வெளியிட்டு பேசினார். 
அவர் பேசுகையில், பாடத்தை மாணவர்கள் படமாக காணும்போது, எளிதில் புரிந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.  
தேர்வு நெருங்கியுள்ள நேரத்தில் இந்த விடியோவை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கணக்குப்பதிவியல் பாடத்தை எவ்வாறு கற்பிப்பது, பொதுத்தேர்வில் இந்த விடியோ மூலம் மாணவர்களை 200-க்கு 200 மதிப்பெண்கள் பெறச் செய்வது எப்படி' என விளக்கிப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT