மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்
மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணியில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது ஞாயிற்றுக்கிழமை (22-ம்தேதி) இரவு 8.30 மணி முதல் 30,000 கன அடியாகவும், திங்கள்கிழமை முதல் 50,000 கன அடியாகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்ட காவிரி ஆற்றின் கரையோர ப்பகுதிகளிலும், வெள்ள நீர் எளிதாக புகுவதற்காகன வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றில் இறங்கி குளிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களும், சிறியவர்களும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கரையோரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு தண்டாரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.