சேமிப்பு: பள்ளி மாணவர்களுக்கு உண்டியல் வழங்கல்
பள்ளி மாணவர்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், கரூர் வள்ளுவர் அறக்கட்டளை
பள்ளி மாணவர்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், கரூர் வள்ளுவர் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கேவிபி உண்டியல் வழங்கப்பட்டது.
கரூர் வள்ளுவர் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் அறக்கட்டளை சார்பில் வங்கிகளில் மாணவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி, அவர்களுக்கு கோழிக்குஞ்சு உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து தேசிய சிறுசேமிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்கு புத்தகம் வழங்கும் விழா அண்மையில் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளி செயலாளர் அருண் கருப்புசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சித்ரா முன்னிலை வகித்தார். வள்ளுவர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் க. செங்குட்டுவன் அறக்கட்டளை சார்பில் 100 மாணவ, மாணவிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வங்கி கணக்கு தொடங்கி அவர்களின் வங்கிக் கணக்கு புத்தகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கரூர் வைஸ்யா வங்கியின் மத்திய கிளை முதன்மை மேலாளர் பிஜூகுமார் 100 மாணவ, மாணவிகளுக்கும் கேவிபியின் 100 உண்டியல்களை வழங்கினார். தொடர்ந்து சிறு சேமிப்பு குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கணித ஆசிரியர் பொன்னுசாமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.