கரூர்

இளைஞருக்கு கத்திக்குத்து: ரயில்வே ஊழியர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு

DIN


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் நின்று தகாத வார்த்தை பேசிய அதே பகுதியைச் சேர்ந்த ரகு, ராகுல் ஆகியோரை தட்டிக் கேட்டாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அங்குள்ள பகவதியம்மன் கோயில் அருகே மகேந்திரன் நின்றபோது அங்கு வந்த ரகு உறவினர்கள் ராஜேஷ்கண்ணன்(34), ஈரோடு ரயில் நிலைய ஊழியர் ரகுபதி (31) ஆகியோர் தகராறு செய்து மகேந்திரனை கத்தியால் குத்தினராம். இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் கரூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து ராஜேஷ்கண்ணன், ரகுபதி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT