கரூர்

அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்

DIN

கரூர் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் திங்கள்கிழமை காலை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கப்படுவதாகக் கூறி, திங்கள்கிழமை காலை  ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணிகளை மட்டுமல்லாது, செவிலியர்களும் தங்களிடம் வேலை வாங்கின்றனர். எனவே இதுகுறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்த மருத்துவமனை அதிகாரி மணிவாசகம் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரண உதவி

பாஜக கூட்டணியில் உத்தவ் தாக்கரே இணைவாா்: மகாராஷ்டிர எம்எல்ஏ கருத்து

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வாக்கு கணிப்புகளுக்கு மாறாகத் தோ்தல் முடிவுகள் இருக்கும்: சோனியா காந்தி

ஆம்பூரில்...

SCROLL FOR NEXT