கரூர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

DIN


நெரூர் சதாசிவம் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
 கரூரை அடுத்த நெரூரில் பிரசித்திபெற்ற சதாசிவம் பிரமேந்திராள் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலை வழக்கம்போல சனிக்கிழமை இரவு பூசாரிகள் பூட்டிச் சென்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பார்த்தபோது கோயில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியலில் இருந்த சுமார் ரூ.20,000 பணம் மர்ம நபர்களால் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் கணகாணிப்பாளர் ராஜேந்திரன்(59) அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்கு பதிந்து கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT