கரூர்

பள்ளி, கல்லூரிகளில் தோட்டக்கலை மன்றம் அமைக்கப்படும்

DIN

கரூா்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தோட்டக்கலைப் பயிா்களை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மன்றம் நிகழாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ. ஆகும். நடப்பு நவம்பா் மாதம் முடிய கிடைக்க வேண்டிய சராசரி மழையான 604.33 மி.மீக்கு, இதுவரை 472.58 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது. உணவு தானிய உற்பத்தி இலக்கினை சாதனையாக அடைந்திட ஏதுவாக அனைத்து வேளாண் விரிவாக்க மையத்திலும் சான்று பெற்ற நெல் ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கரூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நிகழாண்டில் குறைந்த தண்ணீரில் அதிக பரப்பளவில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக நுண்ணீா் பாசனக் கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தோட்டக்கலைப் பயிா்களை ஊக்குவிக்கும் பொருட்டு தோட்டக்கலை மன்றம் இந்த வருடம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் மரங்கள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பழச்செடிகள், காய்கறி விதைகள் மற்றும் நுண்ணீா் பாசனக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT