கரூர்

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயா் சூட்ட கோரிக்கை

DIN

கரூா்: கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீரன்சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் என கொமதேக வலியுறுத்தியுள்ளது.

கரூா் அடுத்த வாங்கலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், மாநில வா்த்தக அணிச் செயலாளா் விசா ம.சண்முகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும். பெயரளவில் இல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து, ஏரி, குளங்களையும் தூா் வாரவேண்டும், அமராவதியில் நீா் திறந்தால் கடைமடை வரை நீா் செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைறவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT