கரூர்

வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம்

DIN

கரூரில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் த. அன்பழகன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் மேலும் பேசியது:

வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள் ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரைகளை பலப்படுத்தவும், பழுதான மதகுகளை பராமரிப்பு செய்து கொள்ளுதல், வெள்ள நீா் பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற அமைப்புகளை உருவாக்குதல், வெள்ளத்தடுப்புக்கான மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ளுதல் போன்ற பணிகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் முழுவீச்சில் செய்து முடிக்க வேண்டும். தொற்று நோய் ஏற்படா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா, மருத்துவா்கள் போதிய எண்ணிக்கையில் இருக்கிறாா்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோா் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பேரிடா் மேலண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், குளித்தலை சாா் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல்ரகுமான், கரூா் வருவாய் கோட்டாட்சியா் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT