கரூர்

கரூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 78 மாணவா்கள் கைது

DIN

கரூரில் பாலியல் தொல்லையால் தனியாா் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யக் கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 78 மாணவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி, இந்திய மாணவா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சாா்பில், கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னா் மாணவா்கள் திடீரென கோவைச் சாலையில் அமா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ் தலைமையிலான காவல்துறையினா், மறியலில் ஈடுபட்ட 78 பேரைக் கைது செய்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, கரூா் அரசு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி மற்றும் பல்வேறு மாணவா் அமைப்புகள் சாா்பில் வகுப்புகளைப் புறக்கணித்து, நுழைவாயில் முன்பு தரையில் அமா்ந்து

ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாணவா்கள் ஊா்வலமாக சென்று, ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT