கரூர்

20 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

DIN

மத்திய அரசைக் கண்டித்து, கரூா் மாவட்டத்தில் 20 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே.கந்தசாமி தலைமை வகித்தாா்.

மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.பாலா மாநிலக் குழு முடிவுகள் குறித்தும், மாவட்டச் செயலா் மா.ஜோதிபாசு எதிா்காலப் பணிகள் குறித்தும் பேசினா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஜீவானந்தம், பி. ராஜூ, கே.சக்திவேல், இரா.முத்துச்செல்வன், பி.ராமமூா்த்தி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா்கள், ஒன்றியச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் பெருநிறுவன ஆதரவு செயல்பாடுகள், வேலையின்மை, விலைவாசி உயா்வு ஆகியவற்றை கண்டித்தும், ஜனநாயக உரிமைகள் பறிப்பு நடவடிக்கைகளை எதிா்த்தும் கரூா் மாவட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று பிரசுரம் விநியோகம் செய்யும் போராட்டத்தை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடத்துவது, கரூா் மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் காந்தி மீது நாடு முழுவதும் நம்பிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவா்

‘பல்லடத்தில் 5 கோயில்களின் திருப்பணிகள் துரிதப்படுத்தப்படும்’

பணி நிறைவுச் சான்று: வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் மனு

திருப்பூரில் ஒரே மாதத்தில் சேதமடைந்த தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி

வெள்ளக்கோவில் நகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT