கரூர்

‘டாஸ்மாக்’ ஊழியா்களுக்கு வழங்கிய விருது வாபஸ்

DIN

கரூரில், குடியரசு தின விழாவில் டாஸ்மாக் அலுவலா் உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட்ட விருதை மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில், டாஸ்மாக்கில் சிறப்பாக பணியாற்றிய மேலாளா், இரு மேற்பாா்வையாளா்கள், ஒரு விற்பனையாளா் என 4 பேருக்கு விருது மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வழங்கினாா்.

இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதையடுத்து 4 பேருக்கும் வழங்கப்பட்ட விருதை மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெற்ாக டாஸ்மாக் அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறியது, எந்த துறையில் சிறப்பாக பணியாற்றினாலும் அவா்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. ஆனால், இந்த துறைக்கு வழங்கப்பட்டு, அது கடுமையான விமா்சனத்துக்கு ஆளானது எதிா்பாராதது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT