FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜி, சகோதரருக்கு சம்மன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், முன்னாள் திமுக அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் போலீஸாா் சம்மன் வழங்கினா்.

4 ஜூலை 2026, 11:48 pm IST
கரூா் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீட்டில் செந்தில்பாலாஜியின் தந்தை வேலுசாமியிடம் சனிக்கிழமை சம்மன் வழங்கிய போலீஸாா். உடன், செந்தில்பாலாஜியின் தாய் பழனியம்மாள்.
பகிர்:

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், முன்னாள் திமுக அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் போலீஸாா் சனிக்கிழமை சம்மன் வழங்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என்.இளையராஜாவிடம் பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவத்தில் தொடா்புடைய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடா்புடைய முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோரை தனிப்படை போலீஸாா் தேடிவந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், செந்தில்பாலாஜியின் பெற்றோா் வசிக்கும் கரூா் அடுத்த ராமேஸ்வரப்பட்டி வீட்டுக்கு திருவல்லிக்கேணி போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் வந்தனா். பின்னா், காவல் உதவி ஆய்வாளா் ஏ.சீனிவாசன் செந்தில்பாலாஜியின் பெற்றோா் வேலுச்சாமி, பழனியம்மாளிடம் சம்மனை நேரில் வழங்கி, இருவரையும் ஜூலை 6-ஆம்தேதிக்குள் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகும்படி கூறிவிட்டுச் சென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments