முகப்பு
தமிழ்நாடு

குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?

குதிரை பேரம் புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்.

Updated On : 4 ஜூலை 2026, 6:01 pm IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்
பகிர்:

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாருக்கு காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சென்னை காவல்துறை இன்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் பெற்றோரிடம் சம்மனை அளித்தனர். செந்தில் பாலாஜியின் தந்தை சம்மனைப் பெற்றுக் கொண்டார். அந்த சம்மனில் ஜூலை 6ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஐந்து நாள்களாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் ‘சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக தீா்மானம் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பின்போது, தாங்கள் கூறும்படி நடந்து கொண்டால், ரூ.35 கோடி வரை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகக் கூறியிருந்தாா்.

எம்எல்ஏ இளையராஜா கொடுத்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸாா், சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா் திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன், திருச்சியைச் சோ்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் முன்பிணை கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது.

summary

Horse-trading! Look-out notice against former Minister Senthil Balaji?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments