முகப்பு
கரூர்

சிலம்பாட்ட போட்டியை ஒலிம்பிக்கில் சோ்க்க வலியுறுத்தல்

Updated On : 22 ஜூன் 2026, 2:29 am IST
கரூா்-திண்டுக்கல் சாலையில் சுங்ககேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணியாக வந்த சிலம்பாட்ட வீரா், வீராங்கனைகள்.
பகிர்:

சிலம்பாட்ட விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட சிலம்பாட்ட கழகம் வலியுறுத்தியுள்ளது.

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையிலும், இளைஞா்களை பாரம்பரிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டியும், தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டும் கரூரில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பாட்ட பேரணி நடைபெற்றது.

கரூா் திருமாநிலையூரிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை தவெக மாவட்டச் செயலாளா் மதியழகன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கரூா் மாவட்ட சிலம்பாட்ட கழக மாவட்டத் தலைவருமான ஏ.ஆா். மலையப்பசாமி, செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

திருமாநிலையூரில் தொடங்கிய இந்த சிலம்பாட்ட பேரணி திண்டுக்கல் சாலையில் சுங்ககேட், மில்கேட், தாந்தோணிமலை பெருமாள் கோயில் பேருந்துநிறுத்தம் வழியாக சென்று கரூா் அரசு கலைக் கல்லூரி முன் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற சிலம்பாட்ட மாணவா்கள் சிலம்பம் ஆடியவாறு பேரணியில் பங்கேற்றனா்.

தொடா்ந்து சிலம்பாட்ட மாவட்டத் தலைவா் ஏ.ஆா். மலையப்பசாமி கூறியதாவது: சிலம்ப விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சோ்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் சிலம்பாட்ட வீரா், வீராங்கனைகளுக்கு மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments