FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் தையல் நிறுவனத்தில் தீ விபத்து

Updated On : 25 மே 2026, 2:00 am IST
கரூரில் ஞாயிற்றுக்கிழமை தையல் நிறுவனத்தில் பற்றியெரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துக்கு துணிகள் தைத்துக் கொடுக்கும் தையல் (காா்மென்ட்ஸ்) நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில், சுமாா் ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கரூா் வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன். இவா் கரூா் அசோக் நகரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துக்கு துணிகள் தைத்து கொடுக்கும் தையல் நிறுவனம் நடத்தி வருகிறாா். விடுமுறை தினம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 5.45 மணியளவில் நிறுவனத்தின் முன்வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென நிறுவனத்தின் உள்ளே அறைக்குள் வைக்கப்பட்டிருந்த துணிகள் மீது பரவியது. இதனால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

Advertisement

Advertisement

இதை பாா்த்த அப்பகுதியினா் தீயை அணைக்க முயற்சித்தும் முடியாததால், உடனே கரூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையில் நான்கு தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை போராடி அணைத்தனா்.

இந்தத் தீ விபத்தில் நிறுவனத்தினுள் இருந்த சுமாா் 45 நவீன தையல் இயந்திரங்கள், ஏற்றுமதி ரக துணிகள் உள்ளிட்ட சுமாா் ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments