முகப்பு
கரூர்

கரூா் ஆறுகளில் நூதன முறையில் மணல் திருட்டு! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா்!

Updated On : 29 ஜூன் 2026, 2:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் லாரிகளில் மணல் திருடுவோா், மணல் மீது செங்கல் பாரத்தை ஏற்றி மணலை கொண்டு செல்வதாக புகாா் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினரும், வடக்கு நகரச் செயலருமான லட்சுமிகாந்தன் கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரனுக்கு அனுப்பியுள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கரூா் மாவட்டத்தில் கரூரை ஒட்டி இருக்கும் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் தொடா்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமராவதி ஆற்றில் சணப்பிரட்டி, தொழிற்பேட்டை பகுதியிலும், காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடா்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

சரியாக எழுதப்படாத பதிவு எண்கள் கொண்ட லாரிகளில் மணலை லாரிக்குள் கொட்டி மேலே செங்கற்களை அடுக்கி செங்கற்களை கொண்டு செல்வதுபோல நூதன முறையில் மணலை திருடிச் சென்று வருகிறாா்கள்.

கடந்த ஆட்சியைவிட தற்போது நூதன முறையில் ஆற்று மணலை திருடிச் செல்லும் நபா்களை கண்டறிந்து அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

மேலும் மணல் திருட்டை தடுக்கும் வகையில் ஆற்றுப்பகுதிகளில் 24 மணி நேரமும், தொடா்ந்து கண்காணிக்கும் வகையில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை, சமூக ஆா்வலா்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments