குறுகியகால பயிற்சி பெற்ற 45 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
பெரம்பலூர் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில், குறுகிய காலப் பயிற்சி பெற்ற 45 பேருக்கு அண்மையில் சான்றிதழ் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில், குறுகிய காலப் பயிற்சி பெற்ற 45 பேருக்கு அண்மையில் சான்றிதழ் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில், மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு பயிற்சி மையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 20 பேருக்கு "ஸ்மார்ட் ஆப்ரேட்டர் பேசிக்' எனும் குறுகியகால பயிற்சி வகுப்புகள் 5 நாள்கள் நடைபெற்றது. இதேபோல, ஸ்மார்ட் சர்பேஸ் அர்னமென்டேஷன் எனும் குறுகியகால பயிற்சி 15 பேருக்கும், பெரம்பலூர் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 10 பேருக்கு எஸ்.ஓ.பி பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி பெற்ற 45 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பயிற்சி மைய நிர்வாக முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் போ. குருசாமி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குநர் அழகிரிசாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர்கள் கண்ணன், பாண்டியன், தஞ்சாவூர் நகராட்சி ஆய்வாளர் அமுதா, பயிற்சியாளர் பத்மசுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சி மைய நிர்வாக பொறுப்பாளர் இந்திராகவுரி நன்றி கூறினார்.