முகப்பு
பெரம்பலூர்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அமைப்பு சாரா நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:23 am IST
பகிர்:

அமைப்பு சாரா நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் எதிரே சி.ஐ.டி.யு  அமைப்பு சாரா தொழிலாளார்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஏ. ரெங்கநாதன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஆர். அழகர்சாமி, சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி. ரெங்கராஜ், ஆட்டோ சங்க மாநிலக்குழு உறுப்பினர் சி. சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினர்.  
இதில், அமைப்பு சாரா நல வாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். 
வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும். புதிய சாலை மசோதாவைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தரைக்கடை மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். நலவாரியத்தில் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு, படிப்பைக் காரணம் காட்டி பேட்ஜ் வழங்குவதை தடை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், அனைத்து வகையான ஆட்டோ ஓட்டுநர்கள், பொது தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு சாலையோர வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments