பெரம்பலூர்

துரித உணவு தயாரிப்புப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் 

DIN

துரித உணவு தயாரிப்பது குறித்த இலவசப் பயிற்சி  பெற ஆர்வமுள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் ஜே. அகல்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டிச.18 ஆம் தேதி முதல் துரித உணவு தயாரிப்புப் பயிற்சி  இலவசமாக பயிற்சி மையத்தில் அளிக்கப்பட உள்ளது. 18 வயதை கடந்த எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் இப்பயிற்சியில்  பங்கேற்கலாம். 10நாள்கள் நடைபெறும் பயிற்சிக்குப் பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.டிச.14 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு  04328- 277896  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

SCROLL FOR NEXT